top of page
பாலியல்
இனப்பெருக்க நலன்
மற்றும் உரிமைகள்-SRHR
Image
பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

கெய்ரோவில் 1994ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்கள் தொகை மற்றும் முnனேற்றம் குறித்த சர்வதேச மாநாடு (International Conference on Population and Developmenmt-ICPD) பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகளுக்கு (Sexual and Reproductive health Rights-SRHR) ஓர் சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான பல குறிக்கோள்கள் மற்றும் நடவடிக்கைகள் அடங்கிய செயல்திட்டம் ஒன்று அம்மாநாட்டில் உருவாக்கபட்டது. அதை நிறைவேற்ற கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த மாநாட்டின் 25ம் ஆண்டில், 2019ல் கென்யா நைரோபி நகரில் ICPD+25 மாநாட்டில் கூடிய சர்வதேச நாடுகள் "பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகளின் (Sexual and Reproductive health Rights-SRHR)" முக்கியத்துவதை மீண்டும் வலியுறுத்தி

பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகளை 4 முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம்:

பாலியல் ஆரோக்கியம் (Sexual Health), அதாவது உடல், மனம் மற்றும் சமுக நல் வாழ்வு. பாலியல் தொடர்பான நோய்கள், மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு
 

பாலியல் உரிமைகள்(Sexual Rights), அதாவது பாலியல் உறவை தேர்ந்தேடுக்கும் உரிமை, பாலியல் உறவு பங்குதாரரை தேர்ந்தேடுக்கும் உரிமை, தனிமை, இன்பத்திற்கான உரிமை.
 

இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health), அதாவது ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பு, ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தேவையான கல்வி, சுகாதார பராமரிப்பு, மருந்துகள் ஆகியவற்றிக்கான உரிமை
 

இனப்பெருக்க உரிமைகள் (Reproductive Rights) பாகுபாடுகள், வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு, எப்பொழுது குழந்தை பெறுவது, அல்லது பெறாமல் இருப்பது, தேவையற்ற கருவை கலைப்பது, குடும்ப கட்டுபாடு ஆகியவற்றை தீரிமானிப்பதற்கான உரிமை

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்:
சினேகிதி மேலும் விபரங்கள்

சினேகிதி ஆண்டறிக்கை

சினேகிதி செய்தி மடல் மற்றும் விபரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அல்லது WhatsApp எண்ணை பதிவு செய்யவும் (இதை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்)

© 2026 SNEHIDHI. All Rights Reserved

bottom of page