top of page
மாதவிடாய்
d.png
மாதவிடாய் என்றால் என்ன?

மாதவிடாய் சுழற்சி பெண்கள் வயதிற்கு வந்துடன் தொடங்குகிறது. இது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வருவதனால் இதை மாதவிடாய் சுழற்சி என்கிறோம். மாதவிடாய் என்பது 3 – 6 நாட்கள் வரை தொடரும். இந்த நாட்களில் பெண்கள் சோர்வாகவும், சோம்பலாகவும், கலகலப்பின்றியும் காணப்படுவார்கள்,. மாதவிடாயும் உதிரப் போக்கும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான். அதைப் பொத்திப் பொத்தி மறைத்துவைக்கத் தேவையில்லை, அருவருக்கவும் தேவையில்லை. அடுத்தவருக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடுமே என்ற நினைப்பு தேவையற்றது.

அப்பா, அண்ணன், கணவன், பள்ளியில் உடன் பயிலும் நண்பன், அலுவலக நண்பன் என்று அனைவரிடமும் பெண்கள் தயக்கமின்றி மாதவிடாய் குறித்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தவறு என்ற மூடநம்பிக்கையை தொடர்வதன் மூலம், பெண்ணாகப் அந்த நாட்களில் பெண்கள் படும் வேதனை குறித்தும் உணர்ந்த ஆண்கள் அதைக் கேலிக்குரியதாகவோ கிளர்ச்சிக்குரியதாகவோ அணுக மாட்டார்கள். ஏனென்றால், மாதவிடாய் வலிகளை சமாளிக்கவும் கடந்துவரவும் ஆண்களின் துணையும் புரிதலும் பெண்களுக்கு அவசியம்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்:
மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்:
சினேகிதி மேலும் விபரங்கள்

சினேகிதி ஆண்டறிக்கை

சினேகிதி செய்தி மடல் மற்றும் விபரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அல்லது WhatsApp எண்ணை பதிவு செய்யவும் (இதை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்)

© 2026 SNEHIDHI. All Rights Reserved

bottom of page